திருவிடைமருதூர் தாலுக்காவில் 45 பேருக்கு கொரோனா
திருவிடைமருதூர் தாலுக்காவில் 45 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,80,736 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 27,556 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,116 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,769 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் திருவிடைமருதூர் தாலுக்காவில் மட்டும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது