திருவிடைமருதூர் இரு வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்க விழா

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் இரு வழித்தடங்களில் நகரப் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.;

Update: 2021-08-22 08:06 GMT

பேருந்து சேவையை தொடங்கிவைத்த தமிழகஅரசின் தலைமை கொறடா கோவி செழியன்.

ஆடுதுறை - கும்பகோணம் - சுவாமிமலை தடத்தில் ஒரு நகரப் பேருந்தும், போழக்குடி- கும்பகோணம் தடத்தில் ஒரு நகரப் பேருந்து என இரு வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி, துணை மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News