தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது, தேவை இல்லாத ஒன்று .
தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அலை தொடங்கவில்லை, தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகில் எங்குமே 16 கோடி ரூபாய்க்கு ஊசி இல்லை என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தஞ்சை அருகே உள்ள முன்னையம்ப்பட்டி முகாமினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து, பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26,769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை 4 கோடியே நாற்பத்தி மூன்று லட்சத்து 95,527 தடுப்பூசிகள் செலுத்த பட்டுள்ளது. , இன்று மட்டும் 20 லட்சம் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுவிடும். அதன் முலம் 5 கோடி இலக்கை எட்டப்படும். 60 சதவீதத்தை தொட்டு விடும். தமிழகத்தில் இதுவரை 500 மேற்பட்ட கிராமங்கள் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்கள் 100% இலக்கை எட்டி உள்ளது. ஒரு கோடியே 39 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், இன்னும் 70% தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இன்னமும் 115 கோடி மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த வேண்டும், 115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது .
இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது. தேவை இல்லாத ஒன்று . அதிமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் தினசரி சராசரியாக நாளொன்றுக்கு 61 ஆயிரத்து 441 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தி உள்ளனர். குறிப்பாக 103 நாட்களில் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தியுள்ளனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 52 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இது 4மடங்கு அதிகம். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை மூன்றாவது அலை தொடங்கவில்லை.
16 கோடி ரூபாய் தடுப்பூசி குறித்து கேட்டதற்கு, இது தவறான தகவல், வதந்தி. அந்த அரிய வகை நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அது தீர்க்கபட்டதாகவும் தகவல் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இதுபோல் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. 14 குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி செலுத்த வேண்டும் என்று வதந்தி வந்து கொண்டிருக்கிறது. அதில் உண்மையில்லை. தவறாக பரவிவரும் மோசமான செய்தி. அதுபோல் 16 கோடிக்கு எங்குமே தடுப்பூசி இல்லை. இருந்தால் நீங்கள் கூறுங்கள் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.