திருவையாறு பேரூராட்சியில் ரூ 3.7 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரம்
திருவையாறு பேரூராட்சியில் ரூ 3.7 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவையாறு பேரூராட்சியின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடந்தை சாலை காவிரி வடகரையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு மயானம் (தகன மேடை) அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பீட்டர் பிலோமினாள் நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இளைஞர் திறன் வளர் மையம் என்னும் நூலகக் கட்டிடம் கட்டப்படுகிறது.
மூலதன மானிய நிதித் திட்டத்தின் மூலம் பஸ்நிலையம் அருகே ஈ.வெ.ரா. காய்கறிச் சந்தையில் ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கடைகள் கட்டும் பணி நடக்கிறது. மொத்தம் ரூ.3 கோடியே 70 லட்சம் செலவில் 3 திட்டங்கள் நடந்து வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் திருவையாறு நவீன நகர் மயமாகி வருகிறது..