வெற்றிலை விவசாயிகள் கவலை

கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் வெற்றிலை விற்பனை பாதித்து வெற்றிலை விவசாயிகள்., வாழ வழியின்றி அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-04-22 08:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை என்பது உலகப்புகழ் பெற்ற பெயராகும். மாவட்டத்தில் ஆவூர், கோவிந்தகுடி, ஊத்துக்காடு உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட வெற்றியிலை விவசாயிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கொரோனா தடை உத்தரவு இரவு நேரங்களில் விதித்துள்ளதால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில மற்றும் மாவட்டங்களுக்கு வெற்றிலையை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பகல் நேரத்தில் வெற்றிலையை கிள்ளி பார்சலாக கட்டி மறுநாள் காலையில் வெளிமாவட்ட, மாநில அனுப்பும் பொழுது, வெற்றிலை பார்சலை பிரிப்பதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. இதனால் வெற்றிலைகள் வாடியும், சுருங்கி, விடுவதால் விலை போகாத நிலை ஏற்படுகிறது,

எனவே கொரனோ தடை உத்தரவின் போது, வெற்றிலைகளை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

வெற்றிலை விவசாயி அப்பாதுரை கூறுகையில், கொரனோ தொற்றால் அனைத்துகாய்கறி விலை அதிகரித்து உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிலையை 25 நாட்களுக்குள் கிள்ளி விற்பனை செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று என்று கூறி எங்களை சீரழித்து வருகிறது. இதனால் வெற்றிலை வியாபாரம் பெரிதும் பாதிப்படைகிறது. கொரனோ எனக் கூறி தடை விதித்தால் நாங்கள் எப்படி வாழ்வது. இந்த நிலை குறித்து தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News