தஞ்சை: கடையில் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்
இதைப்பார்த்த சுப்பிரமணியன் மற்றும் அக்கம்பக்கத்தினர் திருடிய பெண்ணைப் பிடித்து தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்;
தஞ்சை அருகே பைப் விற்பனை கடையில் இருந்து பொருட்களை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சையை அருகே கொல்லாங்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (58). இவர் கண்டிதம்பட்டு சாலையில் பைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடைக்கு வந்த வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மரகதம் (25) என்பவர் ரூ. 5 ஆயிரம் மதிப்பு பைப் பொருட்களை திருடியுள்ளார்.
இதைப்பார்த்த சுப்பிரமணியன் மற்றும் அக்கம்பக்கத்தினர், மரகதத்தை பிடித்து தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து மரகதத்தை கைது செய்தார்.