தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.18 கோடியில் 26 புதிய கட்டிடங்கள்: அமைச்சர் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.18 கோடியில் 26 புதிய கட்டிடங்களை கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்

Update: 2023-05-04 08:30 GMT

தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 618.73 இலட்சம் மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 618. லட்சம் மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.செழியன்  ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரம் ஊராட்சி விருச்சவனத்தில் ரூபாய் 49.60 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மைய கட்டிடமும், ஆலக்குடி ஊராட்சியில் ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஆபுசு நகரில் ரூபாய் 15.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவும், ராஜேந்திரம் ஊராட்சியில் ரூபாய் 12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும்,ரூபாய் 22  லட்சம் மதிப்பீட்டில் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும்.

மானாங்கோரை ஊராட்சியில் ரூபாய் 38.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும், ரூபாய் 23.56 இலட்சம் மதிப்பீட்டில் மானாங்கோரை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும்,ரவுசப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 22.00 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், ஒரத்தநாடு வட்டம் காட்டுக்குறிச்சி ஊராட்சியில் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும் ,புதூர் ஊராட்சியில் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், புதூர் ஊராட்சியில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு சங்க சேமிப்பு கிடங்கும், சமயம்குடிகாடு ஊராட்சியில் ரூபாய் 16.00 இலட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடமும், பாப்பாநாடு ஊராட்சி அவிதனல்ல விஜயபுரத்தில் ரூபாய் 38.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும்.

திருவோணம் வட்டம் சில்லத்தூர் ஊராட்சி மற்றும் காவாலிபட்டி ஊராட்சியில் தலா ரூபாய் 21 இலட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடமும்,பேராவூரணி வட்டம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும்,புனவாசல் ஊராட்சியில் ரூபாய் 22.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூபாய் 11.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும்.

சொர்ணகாடு ஊராட்சியில் ரூபாய் 20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், பேராவூரணி ஊராட்சியில் ரூபாய் 3.75 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவீன நூலகமும், சேதுபாவாசத்திரம் வட்டம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூபாய் 21 .45 இலட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடமும்,.

மதுக்கூர் வட்டம், ஆத்திவெட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 40 லட்ச மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டிடமும், வடக்கு வட்டக்குடி ஊராட்சியில் ரூபாய் 23.56 லட்சம் மதிப்பீட் டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், கீழக்குறிச்சி ஊராட்சியில் ரூபாய் 22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், ஆலத்தூர் ஊராட்சியில் ரூபாய் 19.95 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் என மொத்தம் 618.73 லட்சம் மதிப்பீட்டில் 26 புதிய கட்டிடம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் 58,71,500 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 64 பயனாளிகளுக்கும் , முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி எச்.எஸ். ஸ்ரீகாந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்),  கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை),  என். அசோக்குமார் (பேராவூரணி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். ராமச்சந்திரன்,  மகேஷ் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் கோ. பழனிவேல் தஞ்சாவூர் (பொ), வீ. பிரபாகர் (பட்டுக்கோட்டை), கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் ஈ. தமிழ்ச்செல்வன்.

ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்ட அலுவலர்  கை.ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர்  சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ் செயற்பொறியாளர் பொ.ப.து. (கரூப) பொறி. டி.நாகவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர்  ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர்கள் கே.வைஜெந்திமாலா (தஞ்சாவூர்), சி.பார்வதி சிவசங்கர் (ஒரத்தநாடு), செல்வம் சௌந்தர்ராஜன், (திருவோணம்), சசிகலா ரவிசங்கா,; (பேராவூரணி),  கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்), அமுதா செந்தில் (மதுக்கூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News