பெற்றோரை இழந்து வாடும் சிறுவன் கைகொடுக்குமா? தமிழக அரசு

தஞ்சாவூர் அருகே பெற்றோரை இழந்து, உறவினர்கள் யாரும் இன்றி, ஒரு வேளை உணவுக்கு போராடும் 14 வயது சிறுவனுக்கு. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Update: 2021-06-25 04:00 GMT

தஞ்சாவூர் அருகே தாய்-தந்தையை இழந்து ஒருவேளை உணவுக்கு போராடும் சிறுவன் சபரிநாதன்.



பேராவூரணி::

தஞ்சாவூர் அருகே பெற்றோரை இழந்து, உறவினர்கள் யாரும் இன்றி, ஒரு வேளை உணவுக்கு போராடும் 14 வயது சிறுவனுக்கு. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  அருகில் உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் - ஈஸ்வரி தம்பதி. இவர்களுக்கு சபரிநாதன் என்ற மகன் உள்ளான். ஆசாரியான நீலகண்டனுக்கு குறைந்த வருமானம் என்றாலும், வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் தாய் ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். தாயை இழந்த சபரிநாதன் தனது தந்தை நீலகண்டன் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

மேலும், அருகில் உள்ள களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீலகண்டனுக்கு, கடந்த 22ம் தேதி திடீரென காய்ச்சலும், இருமலும் இருந்தால் அருகில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலே நீலகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பெற்றோரை இழந்து நிர்கதியாய் நிற்கும் சிறுவனுக்கு, உறவினர்கள் யாரும் இல்லாததாலும் கிராமத்து பொதுமக்களே நீலகண்டனின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில் தற்போது சபரிநாதன் ஆதரவற்ற நிலையில் திக்குத் தெரியாமல் இருந்து வருகிறான். சாப்பாட்டுக்கு கூட என்ன செய்வது? என்று தெரியாமல் படிப்பை மேலும் தொடர முடியுமா? என்ற நிலையில் உள்ளது சிறுவனின் வாழ்க்கை.

சிறுவனின் வாழ்க்கை தடம் மாறி போகாமல் இருக்க, சிறுவனுக்கு அரசு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags:    

Similar News