தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நேர்காணல் முகாம்: 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது

Update: 2023-11-22 15:30 GMT

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்  தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.15,67,820 மதிப்பீட்டில் 58 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம்,செங்கமங்கலம் ஊராட்சியில், அருள்மிகு தெய்வங்கபெருமாள் திருக்கோயில் திடலில், மக்கள் நேர்காணல் முகாம் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னிலையில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப. தலைமையில்; இன்று (22.11.2023) நடைபெற்றது.

இம்முகாமில் ரூ.15,67,820 மதிப்பீட்டில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கி நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்ததாவது :தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் ஊராட்சியில், அருள்மிகு தெய்வங்கபெருமாள் திருக்கோயில் திடலில் மக்கள் நேர்காணல் முகாம் இன்று நடைபெற்றது.

மேலும்,  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய்.34,200 மதிப்பீட்டில் உதவித் தொகையும், NkYk திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும்,Bio Fertilizer 2 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் இந்திராகாந்தி திட்டத்தின் கீழ் செங்கமங்கலம் சுயஉதவிக்குழுவிற்கு ரூபாய் 15,00,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தோட்டக் கலைத்துறையின் மூலம் மானியம் பெறும் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 33,625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூபாய் ரூ.15,67,820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்  தெரிவித்தார்.

முன்னதாக தோட்டக்கலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்டஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  நா.அசோக்குமார்  ஆகியோர் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில்; ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினர் உ.துரைமாணிக்கம், முன்னாள் ஒன்றியகுழுத் தலைவர் ராஜரத்தினம்,வருவாய் கோட்டாட்சியர்  அ.அக்பர் அலி,வட்டாட்சியர் தெய்வானை,செங்கமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர்  ஆர்.செல்வம் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News