பேராவூரணி அருகே திருமணமான 15 நாளில் நகை, மொய்ப்பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருமணம் ஆகி 15 நாட்களில் மொய்ப்பணம் நகையுடன் காதலனோடு புதுமணப்பெண் சென்றதால் புதுமாப்பிள்ளை,குடும்பத்தினர் தவித்து நிற்கின்றனர்.;

Update: 2021-07-11 11:30 GMT

திருமண கோலத்தில் விக்னேஷும் கற்பகவள்ளியும்.

 பேராவூரணி அருகே திருமணமான, 15 நாளில் கணவன் வீட்டிலிருந்து  10 பவுன் நகை, 2 லட்சம்  மொய்ப்பணத்துடன், புதுப்பெண் காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் மணிகண்டன் 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மகன் விக்னேஷ்(26) துபாயில் வேலை பார்த்து வந்தார்.  சின்ன தெற்குகாட்டை  சேர்ந்த  சிதம்பரம் மகள் கற்பகவள்ளி(19) பேராவூரணி தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர். விக்னேஷுக்கும் கற்பகவள்ளிக்கும்  திருமணம் செய்ய கடந்த ஓராண்டுக்கு முன்பு பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 26 ம்தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில், விக்னேஷ் கண் விழித்து பார்த்தபோது கற்பகவள்ளியை படுக்கையில் காணவில்லை. வீட்டில் உள்ள அனைவரும் தேடியும் காணவில்லை. உடனே விக்னேஷ் குடும்பத்தினர், கற்பகவள்ளியின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விக்னேஷ் வீட்டிற்கு வந்தனர். 

,கற்பகவள்ளிக்கும் , சின்ன தெற்குகாட்டை சேர்ந்த மணிகண்டன் (25), என்பவருக்கும், பழக்கம் இருந்ததாகவும், திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு கற்பகவள்ளியை மணிகன்டன் சந்திக்க முற்சித்தபோது பிரச்சனை ஏற்பட்டு, ஊர் பிரமுகர்கள் முன்னிலையில், கற்பகவள்ளி திருமணம் தொடர்பாக தம்மால் எந்த பிரச்சினையும் வராது என மணிகண்டன்  எழுதிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

அப்போது, வீட்டில் வைத்திருந்த 2 லட்சம் மொய்ப்பணம், 10 பவுன் நகை, விக்னேஷின் 30 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன், புடவைகள் போன்றவைகளை எடுத்துக்கொண்டு  பைக்கை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து விக்னேஷின் தந்தை முருகேசன் பேராவூரணி போலீசில் அளித்த புகாரில், மணிகண்டன்  அவரது தந்தை நடராஜன், அவரது மனைவி சித்ரா, மணிகண்டன் அண்ணன் வினோத், நண்பர்  அரவிந்தன் ஆகியோரை  போலீசார் கைது செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News