தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Jamabandi begins in Thanjavur district Collector Inspection

Update: 2022-06-24 11:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் போராவூரணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பேராவூரணி; வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமையில் ஜமாபந்திநடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

1431 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும் நேற்று தொடங்கியது. பேராவூரணி வருடத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

முதல் நாளில் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட,  பெருமகளூர் தென்பாதி, பெருமகளூர் வடபாதி, கொளக்குடி, வலையன்வயல், குப்பத்தேவன், சோலைக்காடு, ருத்திரசிந்தாமணி, அடைக்கத்தேவன், விளங்குளம் ஆகியவருவாய் கிராமம் மற்றும் கூடுதல் வருவாய் கிராமம் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கிராமநிர்வாக அலுவலர்கள் முலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகளில் ஆய்வு செய்தார். முன்னதாக நிலஅளவையர்  பயன்படுத்தும் அளவிடும் கருவி  சரியாக உள்ளதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை தொடர்பான 55 கோரிக்கை மனுக்களும் இதர துறைகள் தொடர்பான 16 கோரிக்கை மனுக்களும் என மொத்தம் 71 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 6 மனுக்கள் உடனடியாக தீர்வு செய்யப்பட்டு 4 வீட்டுமனைப் பட்டா மற்றும் 2 முதியோர் உதவித்தொகை மாவட்டஆட்சித் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும் 65 மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நில அளவை பிரிவு தொடர்பு உபகரணங்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி. ரங்கராஜன, மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர்   ரத்தினவேல், வட்டாட்சியர்கள் த. சுகுமார், சு.தரணிகா, பேரூராட்சி செயல் அலுவலர்  பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News