பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள் கபடி வீரர்
இந்தியன் ரயில்வே அணியில்விளையாடி ரயில்வே துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த சாதனைக்கு சொந்தக்காரர்.;
பேராவூரணி அருகே கிராம மக்களுக்காக 5 ரூபாய் டீக் கடை திறந்த முன்னாள் கபடி வீரர் சின்னப்பனுக்கு பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கபடி வீரர் ஏ. சின்னப்பன். இவர் நட்சத்திர கபடி வீரராக தமிழ்நாட்டு அணியில் வலம் வந்தவர். கபடி வீரராகிய அவருக்கு 1984 -ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகராக பணி அமர்த்தினர். அன்று முதல் தென்னக ரயில்வே அணியில் விளையாடி ரயில்வே துறைக்கு பெருமை சேர்த்து வந்தார். பின்னர் இந்தியன் ரயில்வே அணியில் தேர்வாகி விளையாடி வந்தார். ரயில்வே துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த 31.12.2020 அன்று பணி ஓய்வு பெற்றார். பிறந்த ஊருக்கும் மண்ணுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி. தனது சொந்த ஊரான பேராவூரணி அருகே உள்ள ஆதனூரில் டீக்கடை அமைத்து மக்களுக்கு டீ 5 ரூபாய்க்கு விற்பனை வருகிறார்.
மேலும் அவர் கூறும் பொழுது, நான் ஓய்வு பெற்ற பிறகு சும்மா இருக்கக் கூடாது. நாம் பிறந்த மண்ணுக்கும் ஊருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி இந்த ஊர் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேநீர் கடை ஆரம்பித்து தேநீர் 5 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கி வருகிறேன். லாபம் ஏதும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒரு சில நாளில் உணவகம் ஆரம்பித்து காலையில் இட்லி 4 ரூபாய்க்கும் தோசை 8 ரூபாய்க்கும் பரோட்டா 8 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளேன்.
மேலும் தேனீர் 5 ரூபாய், காப்பி 8 ரூபாய், லெமன் டீ 5 ரூபாய், நாட்டுச்சக்கரை டீ 8 ரூபாய், வெல்லம்பால் 10 ரூபாய், கருப்பட்டிகாபி 10 ரூபாய், மதியம் சிக்கன்பிரியாணி 80 ரூபாய்க்கும் இரவு வெஜ் ரைஸ் 60 ரூபாய்க்கும் எக்ரைஸ் 70 ரூபாய்க்கும் சிக்கன்ரைஸ் 80 ரூபாய்க்கும் முட்டை லாபா 50 ரூபாய்க்கும் இலை புரோட்டா 70 ரூபாய்க்கும் சில்லி புரோட்டா 50 ரூபாய்க்கும் கொத்து புரோட்டா 70 ரூபாய்க்கும் குறைந்த விலையில் பொதுமக்களின் நலன் கருதி விற்பனை செய்ய உள்ளேன் என்றார். இந்த டீக்கடை பொதுமக்களிடையே நல்ல ஆதரவையும் வரவேற்பையும் பெற்று வருகிறது என்றார் அவர்.