நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாபநாசம் பேரூராட்சியில் தீவிர வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாபநாசம் பேரூராட்சியில் தீவிர வாகன சோதனை;

Update: 2022-02-02 12:49 GMT

பாபநாசத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பூங்கொடி, மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தெற்கு ராஜவீதி, வங்காரம்பேட்டை, 108 சிவாலயம், திருப்பாலத்துறை ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், அன்பளிப்பு பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனையின் போது சிறப்பு காவல் ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் பாஸ்கரன், சுதா, முதல் நிலை காவலர் சோழராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News