பாபநாசத்தில் இடப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு : ஒருவர் சாவு
பாபநாசத்தில் இடப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.;
பாபநாசம் அடுத்த சாலியமங்கலம், பள்ளியூர் கிராமம் கொட்டை கொல்லைமேடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன்கள் பிரபு (38) சின்ன ராஜா (35) இருவரும் கூலி தொழிலாளர்கள்.
இருவரும் நேற்று இரவு தஞ்சை நாகை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், இருவரையும் சரமாரியாக வெட்டினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். சின்ன ராஜா என்பவர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபு உடல் பாபநாசம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
அம்மாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், போலீசார் விசாரணையில், பிரபு, சின்னராசுக்கும், அதே பகுதியில் உள்ளவருக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது