பாபநாசத்தில் ரயில் மோதி மூதாட்டி பலி: கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரணை
பாபநாசம் அரயபுரம் கேட்டு தெருவில்வசித்து வந்தவர் சின்னப்பொண்ணு (வயது 82) இவர் காது கேட்காதவர். இவர் வங்காரம் பேட்டை அரயபுரம் ரயில்வே கிராசிங் அருகே கடக்க முயன்றபோது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார். அரயபுரம் கிராம நிர்வாக அலுவலர் திருக்குமரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து சின்ன பொண்ணு மகன் ராஜேந்திரன் (வயது 64) என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து. பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.