தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.;

Update: 2021-08-23 16:21 GMT

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவரும், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான சிவகுமார் தலைமையில் பாபநாசம் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட காவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகவும், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை நீதிமன்றம் மூலம் விரைந்து முடிப்பதற்கும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், காவல் நிலையத்தில் உள்ள முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் எதிரிகளுக்கு விதிக்கப்பட்ட பிடி கட்டளையை நிறைவேற்றுவது.

இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதன் மூலம் திருட்டு வழக்குகளை தடுப்பது, பள்ளி கல்லூரிகள் தொடங்குவது மற்றும் முடிவடையும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது, மணல் திருட்டை தடுப்பது, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் பழுதடைந்த கேமராக்களை சரிசெய்வது, அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பதை தடை செய்வது, குற்ற தடயப் பொருட்களை பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பது ஆகியவற்றில் துரிதமாக நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுதா, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்த், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஜெகதீசன், பாபநாசம் காவல் ஆய்வாளர் அழகம்மாள், உதவிஆய்வாளர் இளமாறன், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் செந்தில் குமரன், இருப்பு பாதை உதவிகாவல் ஆய்வாளர் லோகநாதன், இருப்புப்பாதை காவலர் பிரபு, அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரோஜினி, பாபநாசம்நீதிமன்ற காவலர்கள் செந்தில், பிரியா, சிவனேசன், நீதிமன்ற தலைமை எழுத்தர் மஞ்சுளா, எழுத்தர் கலைச்செல்வி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடன் இருந்தனர்.  ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.



Tags:    

Similar News