வெள்ளரி விற்பனை மந்தம் - விவசாயிகள் கவலை

பாபநாசம் அருகே பகுதி நேர ஊரடங்கு காரணமாக வெள்ளரி விற்பனை பாதிப்பு. கடன் வாங்கி வெள்ளரி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை

Update: 2021-05-06 08:00 GMT

பாபநாசம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கோடைகாலத்திற்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்கள் முன்பு பயிரிடப்பட்ட வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு ஏற்றவாறு முளைத்துள்ளன.

ஆனால் தமிழக அரசு கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதிநேர மற்றும் முழுஊரடங்கு அமல்படுத்தியதால்  வெள்ளரி விற்பனை பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயி கூறுகையில், வெள்ளரி சாகுபடியில் கடன்களை வாங்கி பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து குத்தகை வயலில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளோம்.  தற்போது விற்பனைக்காக வெள்ளரிப்பிஞ்சு விளைந்துள்ள நிலையில் தமிழக அரசு பகுதிநேர மற்றும் முழு ஊரடங்கு போடுவதால் வெள்ளரிப் பிஞ்சுகள் விற்பனை மந்தமாக உள்ளது.

இதனால் வெள்ளரிப் பிஞ்சுகள் அறுவடை செய்யப்படாமல் இருப்பதால் வெள்ளரிப் பிஞ்சுகள் அனைத்தும்  முற்றி அழுகி விடுகின்றன. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஊரடங்கில் வெள்ளரி விற்பனை செய்வதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News