தஞ்சாவூர் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை- கொலை.: 2 பேர் கைது
இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளைக் கைது செய்தனர்;
தஞ்சாவூர் அருகே திருமணமாகாத இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளைக் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் கனகவல்லி(33). திருமணமாகாத இவர் நாள்தோறும் காலை 8 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வார், மீண்டும் மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார். இதேபோல் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக சென்றவர் அதே கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்தில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டில் கம்பினை மீட்டு அதன்பேரில் காவல்துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர்.இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(28), சதிஷ் (25) இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.