ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடும் போலீஸார்

இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது;

Update: 2021-12-26 06:15 GMT

ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன்குடிகாட்டைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியும் சோழபுரம் காரக்கொல்லையை சேர்ந்த ரவி பாலன் மகன் அஜித்குமார்( 22,) இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் அஜித்குமார் காதலித்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்து பெண்ணின் தாய் வளர்மதி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த வாலிபரையும் மாணவியையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News