ஒரத்தநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்க விழா
ஒரத்தநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்க விழா நடைபெற்றது.;
ஒரத்தநாடு தனியார் மஹாலில், வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட துவக்க விழா நடைபெற்றது.
ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் இரசாயன உரங்கள் வழங்கும் துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் ஈஸ்வர் வரவேற்றார்.
வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். 24 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி.பொட்டாஷ், தக்கை பூண்டு, கோ 51 நெல் ஆகிய விவசாயத்திற்கு தேவையான மானிய உரங்களை வழங்கினார். ஒரத்தநாடு ஒன்றியத்தில் மட்டும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக 600 பேருக்குக்கும், திருவோணம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 300 பேரும் என மொத்தம் 900பேர் இதுவரை பதிவு செய்து உள்ளனர்.
24 விவசாயிகளுக்கு விவசாய இடு பொருட்களை வழங்கி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் :-
திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களே ஆகி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 28 நாட்கள் விவசாயிகளுக்காக மட்டுமே அதிக நேரம் ஒதுக்கி குறைகளை கேட்டு வருகிறார். அதே போல் 18 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டிலையே தஞ்சை மாவட்டத்திலிருந்து 10 சதவீதம் நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரத்தநாடு பகுதியில் மட்டும் அதிகஅளவில் உற்பத்தியாகிறது என்பது பெருமையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.