உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-27 08:30 GMT

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பாண்டிச்சேரி தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல, உடல் ஊனமுற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 5000 வழங்க வேண்டும். இதுகுறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், மாதம் ரூ.1,500 வழங்கிட வேண்டும். மாற்றுத்தறனாளிகளுக்கான உபகரணங்களை மானியத்தில் வழங்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் பணி நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன வலியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாநகர செயலாளர் சி.ராஜன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் பி.சங்கிலிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்பிரியா, மாவட்ட துணை செயலாளர் பி.கிரிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஜி.ராதிகா, கே. மோகன், ஆர்.சசிகுமார், கோவிந்தராஜ், ஆர்.நாகராஜ், ஆர்.அருண், பழனிச்சாமி, என்.சிவபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் எஸ்.ஆர்.திருமேனி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசு, மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.எம்.செந்தில்குமார் சிறப்புரையாற்றினர். எம்.லதா, எஸ்.இந்துமதி, எம்.கோமதி, எம். கலைமணி, எம்.தில்லைநாயகி, ஆர். ராதா, எம்.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் என்.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். எம். பாலசுப்ரமணியன், பழஞ்சூர் எம். பாலசுப்ரமணியன், சி.சந்திர பிரகாஷ், வின்சென்ட் ஜெயராஜ், டி.கோபி செல்வம், வி.கே.கோட்டை துரை, ஆர்.மதியழகன், மேனகா, என்.புஷ்பலதா, ஆர்.சின்னமணி, எஸ்.மணிகண்டன், கே.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் டி.கஸ்தூரி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் யு.பிரபாகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஜி.கிருஷ்ணன், வி.கவிதா, வி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News