கள்ளக்காதல் தெரிந்ததால் கணவனை கொன்ற மனைவி கைது
கொழுந்தனுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால், கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.;
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் இளையராஜா,42. இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனிதா,35,. கும்பகோணம் அடுத்த பந்தல்லுார் அருகே நெய்வாசல் கீழ் தெருவை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஹாசினி (9) என்ற மகளும், நிரஞ்சன் (7) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டாக இளையராஜாவுக்கும், அனிதாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனார். கடந்த நான்கு ஆண்டு பிறகு இளையராஜா கடந்த 23ம் தேதி நெய்வாசலுக்கு மனைவி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இரவு தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி இளையராஜா உடலில் வெட்டுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பந்தல்லுார் போலீசார் இளையராஜா உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் இளையராஜா மனைவி அனிதா, பந்தல்லுார் வி.ஏ.ஓ., பழனிசாமியிடம் ஆஜராகி, தனது கணவனை கொலை செய்ததை தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பெயரில் அனிதாவை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இளையராஜாவின் சித்தப்பா மகனுக்கும், அனிதாவிற்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் அது கணவனுக்கு தெரிந்து தகராறு செய்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் தலைமறைவாக உள்ள இளையராஜாவின் சித்தப்பா மகனை தேடி வருகின்றனர்.