கும்பகோணத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதல்; திடீர் சாலை மறியலால் பரபரப்பு

கும்பகோணத்தில் அலுவலகத்தில் புகுந்து வழக்கறிஞரை தாக்கியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-06 14:22 GMT

அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

கும்பகோணம் அருகே உள்ள நந்திவனத்தில் வசிப்பவர் பாலா (42) வக்கீல். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளார். இவர் அவரது அலுவலகத்தில் இருந்தபோது மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த பாலா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபின் மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News