கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

மே மாதம் 14-ந் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்;

Update: 2022-04-11 01:15 GMT

தேரோட்டத்தை முன்னிட்டு சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

108 வைணவ கோவில்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர் என்ற சிறப்பை கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் பெற்று உள்ளது.

கும்பகோணம் பகுதியில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் என்பதால் தேர் கட்டுமான பணி தொடர்பான பயிற்சி பெற்ற ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் தேரை கட்டமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News