சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்த அவசர கூட்டம்
சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்த அவசர கூட்டம் நடைபெற்றது.;
சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்து அவசர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிவகுமார் தலைமையிலும், செயல் அலுவலர் உஷா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் சங்கர் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சி பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வண்ணமும், பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சொத்து வரி விதிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது.