ரூ.100 கோடி நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி நிலுவைத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-27 17:30 GMT

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பாக நடந்த   ஆர்ப்பாட்டம்  

ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.100 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டுமென வலியுறுத்தி  தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பாக ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயி உமையாள்புரம் உதயகுமார் தலைமை வகித்தார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்,  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.100 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகத்தினர், வங்கி அதிகாரிகளின் துணையோடு ரூ.500 கோடி வரை போலியாக கடன் பெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, ஆலை நிர்வாகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கையில் கரும்பு, தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News