கும்பகோணம்: நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறித்த நபரை பிடித்த பொதுமக்கள்
கும்பகோணத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறித்த திருடனை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்து சங்கிலியை மீட்டனர்;
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகே செக்கடி சந்து பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரா (63) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த திருடனைஅப்பகுதியை சேர்ந்தவர்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவனிடமிருந்து பறிக்கப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கிலி பறித்த திருடனை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் சலீம் (30) என்றும், திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.