கும்பகோணத்தில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-07 06:30 GMT

கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக். 

கும்பகோணம் நகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையிலான நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் கும்பகோணம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில்,  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பஸ் நிலையம் பகுதியில் இருந்த ஒரு சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, உற்பத்தி செய்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News