கும்பகோணம் வந்த புதுக் கனல் : ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்பு

கும்பகோணம் வந்த காவேரி நீரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் காவிரி தாயே வருக, காவிரி தாயே வருக என உற்சாகமாக புதுக் கனலை வரவேற்றனர்.;

Update: 2021-06-19 07:30 GMT

காவேரி நீர் வருவதால் உற்சாகத்தில் ஓடி ஆடும் சிறுவர்கள்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின், குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடிக்காக காவேரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி காவிரியில் 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று கும்பகோணம் வந்தடைந்தது. கும்பகோணத்திற்கு வந்த காவேரி நீரை அம்மா படித்துறையில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக, காவேரி தாயே வருக, காவேரி தாயே வருக என உற்சாகமாக புது கனலை வரவேற்றனர்.



Tags:    

Similar News