New Bus Service From Kumbakonam To Tiruchera-கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வரை புதிய பேருந்து சேவை துவக்கம்
கும்பகோணத்தில் இருந்து விசலூர் வழியாக திருச்சேறை வரை புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.;
New Bus Service From Kumbakonam To Tiruchera-தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின்படியும், பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர் - 2 கிளை தடம் எண் ஏ71 நகரப்பேருந்து மூலம் கும்பகோணத்திலிருந்து மருதாநல்லூர், விசலூர் வழியாக திருச்சேறை வரை 4 நடைகள் இயங்கும் பேருந்தினை நேற்று காலை விசலூரிலிருந்து மயிலாடுதுறை எம்.பி இராமலிங்கம் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிறிஸ்டோபர் ராஜ், யோகானந்தம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, துணை மேலாளர் (வணிகம்), கணேசன், உதவி மேலாளர் (இயக்கம் கூட்டாண்மை) நடராஜன், உதவி பொறியாளர் (வணிகம்) ராஜ்மோகன், கிளை மேலாளர் மதன்ராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2