தஞ்சாவூர் மாவட்டத்தில என் குப்பை - என் பொறுப்பு சிறப்பு தூய்மை பணி முகாம்

My Garbage My Responsibility Special Cleaning Work Camp

Update: 2022-06-12 15:00 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில "என் குப்பை - என் பொறுப்பு" என்ற மாபெரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பேருந்து நிலையத்தில் "என் குப்பை - என்பொறுப்பு" என்ற மாபெரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்  சி.வி.கணேசன், அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் , மாவட்ட ஆட்சித்தலைவர் .தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் , பாராளுமன்ற மேலவை உறுப்பினர் .எஸ்.கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்  ஆகியோர் முன்னிலையில்  அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொதுமக்களிடம்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் மாநகராட்சியில் கடந்த 3.6 .22 முதல் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

நகராட்சிக்கு உட்பட்டபகுதியில் நாற்பத்தி எட்டு வார்டுகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன இதில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. இங்குநாளொன்றுக்கு 75 மெட்ரிக் டன்னிற்கு மேற்பட்ட குப்பைகள் உருவகிறது. இந்த குப்பைகளை 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம்பிரிக்கப்படுகிறது .

ஒவ்வொரு வீடுகளிலும் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இரண்டுவார்டுகளுக்கு ஒரு அனிமேட்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் சுமார்42 மெட்ரிக் டன்னும் 5 நுண்ணுயிர் உரம் ஆக்கும் இடம் மூலம் உரம் ஆக்கப்பட்டு இயற்கை உரமாகவிவசாயிகளுக்கும் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் உருவாக்கப்படும் மக்காத குப்பைகள் ரசாயன கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் டயர்கள் தரம்பிரிக்கப்பட்டு சிமெண்ட் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது இதன்மூலம் ஒருநாள்நாளொன்றுக்கு உருவாக்கப்படும் குப்பைகள் முழுவதுமாக உரமாகவும் எரிபொருளாகவும் மாற்றப்படுகிறது.இவ்வாறு திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு சிறந்த முறையில் கையாளப்படுகிறது.

மேலும் சிறந்த முறையில் குப்பைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காதகுப்பைகளாக பிரித்துக் கொடுப்பதற்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது .தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் உருவாகக்கூடிய காய்கறி கழிவுகள் பயோ மெத்தினிசேஷன் தினிசேஷன்மூலம் கையாளப்பட்ட மீத்தேன் வாயுவாக்கப்பட்டு எரிபொருள் ஆக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்தகூட்டுறவு துப்புரவு பணி ஒவ்வொரு மண்டலங்களிலும் நடைபெற செய்து அதன் மூலம் குப்பைகள் தேங்காமல் பராமரிக்கப்படுகிறது. மக்கள் கூடும் பொது இடங்களான பஸ் நிலையங்கள் காய்கறி மார்க்கெட்டுகள்கடைவீதிகள் கோயில்கள் மருத்துவ மனைகள் வங்கிகள் மற ;றும் பள்ளிகளிலும் இந ;தப் தூய்மை பணிகளைசெய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு காட்டும் வழிகாட்டுதலின்படி குப்பைகளை தரம்பிரித்து வீதிகளில் எரியாமல் துப்புரவு பணியாளர்களிடம் வழங்கப்படும்.

மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் மலம் கழித்தல் குப்பைகளைப் போடுதல் இவற்றை தவிர்த்து பொது சுகாதாரத்தை நல்ல முறையில் பின்பற்ற  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக்பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும் வியாபார நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றார்  அமைச்சர் சண்முகம்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) .சுகபுத்ரா, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்க.அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் க. சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன் மாநகராட்சி ஆணையர் ம. செந்தில் முருகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News