கழிவறை சுத்தமாக இல்லாததால் நகராட்சி அலுவலர்களை கடுமையாக சாடிய எம்எல்ஏ

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கழிவறை சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் நகராட்சி அலுவலர்களை எம்எல்ஏ அன்பழகன் கடுமையாக சாடினார்;

Update: 2021-07-20 05:06 GMT

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி இலவச கழிவறையை எம்எல்ஏ அன்பழகன் பார்வையிட்டார்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் ஆய்வுசெய்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் அங்குள்ள நகராட்சியின் இலவச கழிவறையை பார்வையிட்டார். அப்போது கழிவறை மிகவும் துர்நாற்றம் வீசியதோடு சுகாதாரம் இன்றியும், தரை தளங்கள் உடைந்தும் மற்றும் மேல் கூரைகள் பெயர்ந்தும் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள், அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் பயணிகள் எம்எல்ஏவிடம் பேருந்து நிலையம் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், முறையாக சுத்தம் செய்வதில்லை எனவும் கழிவறை மிகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டினர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி சுகாதார துறை அலுவலர்களை வரவழைத்து, போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முன்பு கண்டித்தார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வரும் இச்சூழலில் பேருந்து நிலைத்தில் கழிவறையை அன்றாடம் சுத்தம் செய்யாமல் நோய் பரப்பும் வகையில் சுகாதாரம் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வைத்துள்ளதாக கடுமையாக பேசினார்.

இன்னும் ஓரிரு நாட்களில் கழிவறை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டுமெனவும் அதனை தான் வந்து மீண்டும் ஆய்வு செய்வேன் எனவும் காட்டமாக தெரிவித்துச் சென்றார்.

Tags:    

Similar News