பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டில் நகை, டிவி திருட்டு: போலீஸார் விசாரணை

இவர் பணிக்கு செல்வதற்காக கடந்த 31-ம் தேதி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.;

Update: 2021-09-05 14:20 GMT

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்ற பாபநாசம் கோயில் அதிகாரியின் வீடு 

பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், டிவி திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, ரெங்கநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அமலு ( 45) .இவர் நாகப்பட்டினம் மாவட்டம்,கீழ்வேளூர் தாலுகா, திருங்கண்ணங்குடி கிராமத்திலுள்ள தாமோதர நாராயணன் பெருமாள் திருக்கோயின் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிக்கு செல்வதற்காக கடந்த 31-ம் தேதி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.  பின்னர், மீண்டும் 4-ம் தேதி இரவு வந்து பார்க்கும்போது, வீட்டில் இரும்பு கிரில் கேட் மற்றும் மர கதவு ஆகியவைகளை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 6 கிராம்  நகைகள், எல்.இ.டி டிவி உள்பட ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக, கோயில் செயல் அதிகாரி அமலு, அளித்த புகாரின் பேரில்,   பாபநாசம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார்  நேரில் வந்து,  வீட்டை  பார்வையிட்டபின்,   வழக்கு பதிவு செய்தனர்.  நகைகள் மற்றும் டிவியை  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருட்டு நடந்த வீட்டில், கைரேகை நிபுணர் சங்கவி,  கைவிரல் ரேகையை பதிவு செய்தார். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News