கும்பகோணத்தில் ஒஎல்எக்ஸ் மூலம் வாகனம் விற்பதாக கூறி நூதன கொள்ளை: 4 பேர் கைது
கும்பகோணத்தில் ஒஎல்எக்ஸ் மூலம் வாகனம் விற்பதாக கூறி, வாங்க வந்தவர்களை தாக்கி பணம் பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தது
கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் சிபிராஜ் என்பவர் ஒஎல்எக்ஸ் மூலம் வாகனங்கள் விற்பதாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த, திருச்சியை சேர்ந்த இருவர் ரூ.70 ஆயிரம் பணத்துடன் சுவாமிமலைக்கு பஸ்ஸில் வந்தனர்.
அவர்களை திருவலஞ்சுழி அருகே இறங்குமாறும் அங்கிருந்து வாகனம் மூலம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சிபிராஜ் கூறியுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த சிபிராஜ் மற்றும் அவது நண்பர்கள். காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த தயாராக இருந்த அவரது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து திருச்சியில் வந்த இருவரையும் அடித்து அவர்களிடமிருந்த ரூ.70,000 மற்றும் செல்போனை பிடுங்கி கொண்டு அடித்து துரத்தி விட்டனர். அவர்கள் அங்கிருந்து நடந்தே சென்று சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் மஹாலட்சுமி தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய இரு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.