கும்பகோணம் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;
Famous rowdy murdered at midnight near Kumbakonam-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதி கன்னி கோயில் தெரு நீடாமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமு மகன் உச்சாணி (எ) விமல் (25). இவர் வீட்டு வாசலிலேயே மினி ஹோட்டல் நடத்திவருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக விமலின் தாய் தமிழரசி (45) கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலைக்கு காரணம் முன் விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2