சுவாமிமலை அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு தீப்பிடித்து சேதம்
கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது இதில் வீட்டில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.;
சுவாமிமலை அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்து சேதம்
சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூ|ர் கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் ராதிகா வயது 30, விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் தனது கணவன் பெருமாள் என்பவருடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஏற்பட்ட மின் கசிவால் கூலி தொழிலாளியின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது இதில் வீட்டில் இருந்த பொருட்கள் உள்பட ரூபாய் 25 ஆயிரம் சேதம் ஏற்பட்டது. தகவலறிந்த அதிமுக கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் கோவிந்தராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.