கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு
கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கும்பகோணத்தில் நேற்று உச்சிபிள்ளையார்கோயில் பகுதியில் சிறிய அளவிலான துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், நகைக்கடைகள் என 10 கடைகள் திறந்திருந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில், காவல் ஆய்வாளர்கள் மணிவேல், அழகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், திறந்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.