கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்
கும்பகோணத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன் வழங்கினார்.;
கும்பகோணம். யாதவர் தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் நித்திஷ்கண்ணன் (13). மாற்றுத்திறனாளியான இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நித்திஷ்கண்ணன், தினந்தோறும் தந்தையார் கொடுக்கும் சிறிய தொகையினை சேமித்து ரூ. 2500 ஆக வைத்திருந்தார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2,500 ஐ , ரித்தீஷ் கண்ணன்,
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார். உடன், கும்பகோணம் நகர திமுக செயலாளர் தமிழழகன் அவர்கள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர் அவர்கள், நகராட்சி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.