தஞ்சையில் தேநீர் கடைகளுக்கு 500 அபராதம்
மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்பட்டிருந்த மளிகை கடைகள், தேநீர் கடைகளுக்கு போக்குவரத்து போலீசார் கடையை அடைத்து ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.
கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி மருந்துக்கடைகள், பெட்ரோல்பங்க், பால் கடைகள் தவிர மற்ற வணிக நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் இன்று முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து திருவிடைமருதூர் பகுதிகளில் மதியம் 12 மணிக்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும். கும்பகோணம் பாலக்கரை, மடத்தை தெரு, காந்தி பூங்கா, உச்சி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தேனீர் கடைகள் உணவகங்கள் மளிகைக் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருந்தன
அவற்றை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அடைத்து அவர்களுக்கு ரூ 500 அபராதம் விதித்தனர். இதேபோல் நாளை 12 மணிக்குப் பிறகு கடை திறக்கப் பட்டிருந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.