தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அறிவுரை: எஸ்பி பங்கேற்பு

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-01 03:48 GMT

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 -ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்படி தேர்தல் கட்டுப்பாட்டு காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆய்வாளர் கூறுகையில், காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும் எனவும், பின்பு தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பணியின்போது காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News