கள்ளக்குறிச்சி சம்பவம் துரதிஷ்டமானது -நடிகர் ராமராஜன்

புளியங்குடி பகுதியில் 35 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் சாமானியம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டார்.

Update: 2024-06-24 09:22 GMT

சாமானியன் திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் ராமராஜனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மக்கள் நாயகன் நடிப்பில் வெளியான சாமானியன் திரைப்படத்தின் 35வது வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

தமிழ் திரைத் துறையில் கொடிகட்டி பறந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் மக்கள் நாயகன் ராமராஜன்.

14 ஆண்டு இடைவெளிக்கு பின் தமிழ் திரையில் தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இணைந்து நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் கடந்த மாதம் 20-ம் தேதி படம் வெளியான நிலையில் தற்போது இருபதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 35-நாட்களை கடந்து திரைப்படம் வெற்றிகரமாக மக்களின் வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 35 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள எஸ்எஸ்எஸ் திரையரங்கு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றி விழாவிற்கு புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் காமராஜ் முன்னிலை வகித்தார். சுபிக்ஸ் ராகுல் வரவேற்பு ஆற்றினார். புளியங்குடி செல்வன் ஆங்கிலப்பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன், அம்பை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ராமராஜன், திரைப்பட இயக்குனர் ராகேஷ், நடிகர் டெம்பிள் சிட்டி குமார், லியோ சிவா, நடிகை நக்ஷா சரண், நடிகர் ஷியாம் ஆகியோர்களுக்கு கேடயங்களை கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் குடியரசு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில்  நடிகர் ராமராஜன் சிறப்புரையாற்றி பேசும்போது:-

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒரு துரதிஷ்டமான சம்பவம் மிகுந்த வேதனையாக உள்ளது. அதற்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துங்கள் என்ற துடன் அங்கிருந்த ரசிகர்கள் உட்பட அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நீண்டு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பேசிய நடிகர் ராமராஜன் பதிய படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் திரையரங்குகளில் ரூ. 200 லிருந்து இருநூறு மூவாயிரம் வரை டிக்கட் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் சமானிய மக்கள் திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனை தமிழக முதல்வர் கட்சி சார்ந்து இல்லாமல் சாமானியனின் கோரிக்கையாக ஏற்று அரங்கின் முன்பக்க இருக்கைகளை ஐம்பது ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார். முடிவில் துரைசாமி பாண்டியன் நன்றி கூறினார்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News