கடனா நதி அணை அடிவாரத்தில் குறுங்காடு அமைக்கும் திட்டம்

கடனா நதி அணை அடிவாரத்தில் 1500 மரக்கன்றுகள் வைத்து குறுங்காடு அமைக்கும் திட்டம் தொடக்கப்பட்டது

Update: 2022-04-10 00:45 GMT

பெத்தான்குடியிருப்பில்  குறுங்காடு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மற்றும் சிவசைலம் ஊராட்சி இணைந்து கடனாநதி அடிவாரப்பகுதியான பெத்தான்குடியிருப்பில் 1,500 மரங்கள் வைத்து குறுங்காடு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ், கடையம் வனப்பாதுகாவலர் ராதை, ஆழ்வார்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் வெள்ளப்பாண்டி ஆகியோர் தலைமையில் 500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன, இதில் அதிக நிழல் தரக்கூடிய புளியமரம், நாவல்மரம், வேப்பமரம், மருதமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மீதம் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த மரங்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு போடப்பட்டுள்ளது.

இந்த மரக்கன்றுகள் அமைந்துள்ள இடத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு பராமரிக்க படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று மரங்கள் மூலம் குறுங்காடுகள் அமைப்பதால் சுத்தமான காற்று மற்றும் மழைப்பொழிவையும் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News