+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!

Update: 2021-06-02 10:45 GMT

சேலம் சிபிஎஸ்இ மாணவி அறிவுச்சுடர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

நாடு முழுவதும் கொரானா 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான அறிவிப்பை பாரத பிரதமர் நேற்று அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தங்களது, மேல் படிப்பு நுழைவுத் தேர்வு என்பதால் அந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பை தொடர வழிவகை உண்டு என்பதால் மத்திய அரசின் முடிவை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவி அறிவுச்சுடர் கூறும்போது, மத்திய அரசு சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்தது போல், மாநில அரசும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் மாணவ மாணவிகளிடையே ஒரு இயல்பான சூழ்நிலை நிலவும். இல்லையெனில் மேற்படிப்பு செல்வதற்கு பல்வேறு வகைகளில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் ஆன்லைன் வகுப்பு மூலம் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்  மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் தகுதியும் திறமையும் வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமையும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News