விராலிமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஆட்சியர் வெளியிட்டார்

Update: 2021-10-10 05:14 GMT

விராலிமலையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை இலுப்பூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தடுப்பு தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தேராவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமினை இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பள்ளி கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News