குடுமியான்மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது

61 ஆண்டுகளுக்குப் பின் இன்று விமர்சையாக நடைபெற்ற இந்த தேரோட்ட திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

Update: 2022-03-17 10:40 GMT

குடுமியான்மலையில் பிரசித்தி பெற்ற 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடவரைக் கோவில் தேரோட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்

 குடுமியான்மலையில் பிரசித்தி பெற்ற 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடவரைக் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயில்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறும் அகிலாண்டேஸ்வரி சமேதா சிகாகிரீஸ்வர் ஆலய கோயிலின் தேரோட்ட திருவிழா கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

அதன்பின்பு புதிய தேர் செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. கடந்த ஆண்டு அந்த பணி நிறைவடைந்து வெள்ளோட்டமும் நடைபெற்றது.சுந்தர #புதுக்கோட்டைசெய்திகள், #கோயில்தேரோட்டம்செய்தி,பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப்பட்டஇக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாசி மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று முக்கிய திருவிழாவான தேரோட்ட திருவிழா நடைபெற்றது.61 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை விமர்சையாக நடைபெற்ற இந்த தேரோட்ட திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

61ஆண்டுகளுக்குப் பின்பு புதிய இரண்டு தேரில் முதல் தேரில் சிகாகிரீஸ்வரரும் இரண்டாவது பெரிய தேரில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் வீட்டில் இருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு சிவசிவா கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சப்பரங்கள் முன்செல்ல அலங்கரிக்கப்பட்ட தேர் அழகாக அசைந்து ஆடியபடியே தேரோடும் முக்கிய வீதிகளில் செண்டை மேளம் மற்றும் மங்கள இசை முழங்க வீதி உலா வந்த காட்சி காண்போரை மயங்க வைத்தது.கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்த தேர்கள் இறுதியில் கோயில் முன்பு நிலை நின்றது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற தேரோட்ட திருவிழா என்பதால் குடுமியான்மலை பகுதி மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தேரோட்ட திருவிழாவில் கலந்துகொண்டு தேரோட்டத்தில் வீதிஉலா காட்சிகளை கண்டு ரசித்ததோடு குடைவரைக் கோயிலுக்கும் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் சிகாகிரீஸ்வரரை பக்தி பரவசத்தோடு வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News