அதிமுக அமைச்சருக்காக மொட்டையடித்து நேர்த்திக்கடன்

ஹாட்ரிக் வெற்றி.;

Update: 2021-05-09 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவூர் ஊராட்சி அதிமுக தொண்டர்கள் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக விராலிமலை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அவர் ஊராட்சியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேண்டுதல் விடுத்திருந்தனர்.

தற்போது மூன்றாவது முறையாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹாட்ரிக் வெற்றி அடைந்ததை முன்னிட்டு விராலிமலை முருகன் தங்களது கோரிக்கையை நிறைவேற்றியதால் இன்று 20க்கும் மேற்பட்டோர் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து தங்களது முடி காணிக்கையை செலுத்தினர் 

சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனையில் அவர் விரைவில் குணமடைந்து கடந்த 10 ஆண்டுகளாக எவ்வாறு எங்கள் தொகுதிக்கு சிறப்பாக பணியாற்றினார் அதே பணியை உடல் நலம் தேறி விரைவில் வந்து எங்கள் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார் என்றும் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவூர் ஊராட்சி அதிமுக தொண்டர்கள் 20க்கும்  விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.



Tags:    

Similar News