விராலிமலை மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
விலாலிமலை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.;
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை அரசு மருத்துவமனையில், முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை பார்வையிட்டு, பின்னர் கொரோனா வார்டிற்கு சென்று தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு, அவர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
பணியாளர்கள் நோய் தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொழுது தாங்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி,அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி கட்டாயம் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்றார்.