புதுக்கோட்டை: மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசி வழங்கிய ஆசிரியர்கள்!
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் அரிசி பை வழங்கினர்.;
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் பாட்னாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் கொரானா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கின் காரணமாக வீடுகளில் முடங்கிப் போயிருந்தனர்.
எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படும் துயர்போக்க அப்பள்ளி ஆசிரியர்கள் ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்தனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளியில் பயிலும் 73 மாணவர்கள் மற்றும் இந்த ஆண்டு பள்ளியில் முதல் வகுப்பில் சேர தகுதியுடைய 14 குழந்தைகள் என மொத்தம் 87 குழந்தைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசிப்பை வீதம் ரூ .40 ஆயிரம் மதிப்பிலான அரிசிப் பைகளை வழங்கினார்கள்.அரிசிப் பையினோ பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார்கள்.