புதுக்கோட்டை :ரூ 45 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபனிடம் புகார் மனு அளித்தனர்.;

Update: 2021-07-12 18:04 GMT

புதுக்கோட்டை அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் பெற்று 45 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் கலிபுல்லா மனைவி ரஷியா பேகம். இவர் அந்த பகுதியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இவரும் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், குழுவில் உள்ள பெண்களிடம் வியாபார அபிவிருத்திக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் பெற்றுத் தருமாறு ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குழுவில் உள்ள அனைத்து பெண்களிடமும் கடன் வாங்கியுள்ளார் அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அவரிடம் கேட்டபோது முறையாக பதில் இல்லை சிறிது நாட்களாக அவர் அந்த பகுதியை விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் ரஷியா பேகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரிடமிருந்து தங்களுடைய பணத்தை மீட்டுத் தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் புகார் மனு அளித்தனர்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதாகவும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுய உதவி குழு நடத்தும் தலைவிக்கும் இந்த மோசடிக்கு தொடர்பு உண்டா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News