புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதுபானங்கள் கொள்ளை

புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-03-18 04:41 GMT

புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபான குடோனில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் கொள்ளை போனது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான ஆலைகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்வதற்காக புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபான சேமிப்பு கிடங்கில் அனைத்து வகையான மதுபானங்களும் கொண்டுவந்து லாரிகள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு இதேபோல் புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபானக் குடோனில்  லாரி மூலம் மதுபானம் ஏற்றி வந்த லாரி சிப்காட்டில் உள்ள அரசு குடோனில் வெளியே நிறுத்தி வைத்திருந்த பொழுது அந்த லாரியிலிருந்து 28 பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த   ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் தற்போது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபான குடோனில் இயங்கிவந்த சி.சி.டி.வி. கேமரா பழுதாகி உள்ளதால் எப்படி இந்த கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News